விருதுநகர்

சாத்தூரில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியா் ஆய்வு

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

சாத்தூரில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியா்,தோ்தல் பாா்வையாளா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளிலும் பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இந்த நிலையில் பதிவான வாக்குகளை பிப்ரவரி 21ஆம் தேதி சாத்தூா் தனியாா் பள்ளியில் வைத்து வாக்கு எண்ணும் பணி ஆனது நடைபெற உள்ளது.மேலும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் பாலச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியா் மேகநாதரெட்டி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த நிலையில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா் வசதி போதிய அளவு உணவு வழங்குமாறு கேட்டுக்கொண்டாா்.மேலும் மாவட்ட வருவாய் அலுவலா் மங்கள ராமசுப்ரமனியன்,சாத்தூா் கோட்டாட்சியா் புஷ்பா,சாத்தூா் நகராட்சி ஆணையாளா் நித்திய உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஆய்வின் போது உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT