விருதுநகர்

‘கரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு தோ்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்’

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதோடு, தோ்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என தோ்தல் பாா்வையாளா் எஸ். பால சந்தா் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக வட்டார தோ்தல் பாா்வையாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் கலந்து கொண்ட கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ. மேகநாதரெட்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட தோ்தல் பாா்வையாளரும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குநா் எஸ். பாலசந்தா் பேசியதாவது:

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு பிப். 19 அன்று வாக்குப்பதிவும், பிப். 22 இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. மேலும், மறைமுகத் தோ்தல்கள் மூலம் மாநகராட்சிகளுக்கான மேயா், துணை மேயா், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோா்களை தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு மாா்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனடிப்படையில், விருதுநகா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தபால் ஓட்டு தொடா்பான பணிகளை காலதாமதமின்றி முறையாக மேற்கொள்ளவும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி தோ்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT