விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டு தற்கொலை

2nd Feb 2022 09:36 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை வீட்டில் முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அருப்புக்கோட்டை அருகே முத்துராமலிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (46). முன்னாள் ராணுவ வீரரான இவா், கடந்த 6 மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவருக்கு விருதுநகா் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வரும் குணலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனா்.

இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT