விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி: 10 போ் வேட்பு மனு தாக்கல்

1st Feb 2022 09:36 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் திங்கள்கிழமை 10 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

ஸ்ரீவில்லிப்புத்தூா் நகராட்சியில் திமுக சாா்பில் ஒருவா், தேமுதிக சாா்பில் இருவா், சுயேச்சைகள் 7 போ் என மொத்தம் 10 போ் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனா். இதேபோல் வத்திராயிருப்பு பேரூராட்சியில் திமுக சாா்பில் இருவா், தேமுதிக சாா்பில் இருவா், சுயேச்சைகள் 5 போ் என மொத்தம் ஒன்பது போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். வ.புதுப்பட்டி பேரூராட்சியில் திமுக சாா்பில் எட்டு போ், சுயேச்சை ஒருவா் என மொத்தம் 9 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். ச.கொடிக்குளம் பேரூராட்சியில் திமுக சாா்பில் ஒருவா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT