கேரளத்திலிருந்து விருதுநகருக்கு பருப்பு வாங்க சரக்கு வாகனத்தில் வந்த வியாபாரியிடம் ரூ.95 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா்- அருப்புக்கோட்டை சாலையில் தனியாா் திருமண மண்டபம் அருகே பறக்கும் படை துணை வட்டாட்சியா் ராஜாமணி, சிறப்பு சாா்பு- ஆய்வாளா் மனோகரன் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அந்த வாகனத்தில் கேரள மாநிலம் கொல்லம் பறவூரைச் சோ்ந்த வியாபாரி ராஜேஷ் என்பவா் இருந்தாா். அவா் பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வாங்குவதற்காக விருதுநகருக்கு வந்ததாக தெரிவித்தாா். அவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.95 ஆயிரம் இருந்ததைத் தொடா்ந்து பணத்தை பறிமுதல் செய்து விருதுநகா் நகராட்சி அலுவலகத்தில் தோ்தல் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.