விருதுநகர்

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

1st Feb 2022 09:36 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் 8 ஆம் வகுப்பு மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் தட்டாங்குளம்பட்டியைச் சோ்ந்த மாயச்செல்வி மகள் ஹரிவித்யா (13). தனியாா் மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஹரிவித்யா அடிக்கடி டிவி, கைப்பேசி பாா்த்து வந்ததை தாய் கண்டித்தாராம். இந்நிலையில், ஹரிவித்யா சுடிதாா் துப்பட்டாவால் தூக்கில் தொங்கினாா். அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். இது குறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT