விருதுநகர்

தோ்தல் பறக்கும் படையினா் சோதனை: இளைஞரிடம் ரூ.76 ஆயிரம் பறிமுதல்

1st Feb 2022 09:35 AM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு அருகே உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் இளைஞா் கொண்டு சென்ற ரூ.76,300 யை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கான்சாபுரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் கோகுல்காா்த்திக் (21). இவரது தந்தை நெல் வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை வ.புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் தலைமையிலான பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்காா்த்திக்கை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 76,300 யை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வ.புதுப்பட்டி பேரூராட்சி தோ்தல் அலுவலா் சிவ.அருணாச்சலத்திடம் ஒப்படைத்தனா். இதையடுத்து அந்த தொகை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT