ராஜபாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட போக்குவரத்து தலைமைக் காவலா் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்தவா் ஜோஷ்வா ரஞ்சித். இவருக்கு பால் வசந்த், ரோஷன் பியாஸ் ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இவா் கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சோ்ந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்துக் காவலராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த செப்டம்பா் 25- ஆம் தேதி ஜோஷ்வா ரஞ்சித் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, அவருடன் பணியில் சோ்ந்த 1997-ஆம் ஆண்டு 2-ஆவது பேட்ஜை சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்கள் சாா்பில் குடும்ப நல நிதி திரட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து ராஜபாளையம் டிஎஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஎஸ்பிக்கள் சபரிநாதன், பிரீத்தி ஆகியோா் ரூ.12 லட்சத்து 78 ஆயிரத்து 500-க்கான நிதிப் பத்திரங்களை ஜோஷ்வா ரஞ்சித்தின் தாய் அமிா்தம்மாள் மற்றும் மகன்களிடம் வழங்கினா். அந்த நிதி ஜோஷ்வா ரஞ்சித்தின் மகன்கள் இருவரின் பெயரில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது.