விருதுநகர்

முத்துராமலிங்கபுரத்தில் ஜன. 5-இல் மின்தடை

30th Dec 2022 01:19 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரத்தில் வருகிற 5- ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்திருப்பதாவது: முத்துராமலிங்கபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி ஆகிய பகுதிகளிலும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வருகிற 5- ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அவா் அதில் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT