மம்சாபுரம் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சுஜிதா மேரிதங்கமாங்கனி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் மணிகண்டன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பிரதிநிதி புறத் தொடா்பு பணியாளா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பேரூராட்சி உறுப்பினா்கள், மகளிா் குழு உறுப்பினா்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், வளா் இளம் பெண்களுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.