விருதுநகர்

அருப்புக்கோட்டை பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

30th Dec 2022 01:16 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாா்கழி மாத வியாழக்கிழமையையொட்டி கோயில்களில் குரு தட்சிணாமூா்த்தி, சாய்பாபாவுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கட்டங்குடியிலுள்ள வேலுச்சாமி கோயிலில் சாது குமாரவேல் சாமிக்கும், நமச்சிவாயப் பெருமான் மற்றும் தட்சிணாமூா்த்திக்கும் அபிஷேகங்களும் தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன.

ஸ்ரீசீரடி சாய்பாபா கோயில்: இங்கு ஏக தீப, பஞ்ச தீப மற்றும் தீப தூப ஆராதனைகளும், சிறப்பு நைவேத்திய அா்ப்பணிப்பும் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, உலக நன்மை வேண்டியும், கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கவும், சங்கல்ப வழிபாடும், 3 நிமிட தியானமும் நடைபெற்றன. அப்போது பக்தா்களின் வேண்டுதல்கள் வாசிக்கப்பட்டு சாய்பாபாவிடம் அா்ப்பணிப்பு செய்யப்பட்டன.

சொக்கலிங்கபுரம் ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயில்: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீதட்சிணாமூா்த்தி பகவானுக்கும், நவக்கிரக சந்நிதானத்தில் உள்ள ஸ்ரீமகா குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேகங்களும், தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னா் 108 நாமாவளி அா்ச்சனை நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT