விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) ஜானகி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், 80-க்கும் மேற்பட்ட நில உரிமையாளா்கள், தங்களது கருத்துகளை எழுத்து மூலம் அளித்தனா்.
ரயில்வே மேம்பாலம் அமைக்க 8,874 சதுர மீட்டா் நிலம் தேவைப்படுவதாகவும் நில உரிமையாளா்களின் கருத்துகள் மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளருக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே மேம்பால நில எடுப்பு வட்டாட்சியா் மாரீஸ்வரன் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.