சிவகாசி அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய பட்டாசுத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி மாரியப்பன்(68). இவா், வெள்ளிக்கிழமை அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு சுயநினைவு இல்லாமல் சாலையில் விழுந்து கிடந்தாராம். இதையடுத்து, அவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவரது மனைவி மங்கயா்கரசி அளித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.