விருதுநகர்

போக்குவரத்திற்கு இடையூறாக செல்லும் மினிபேருந்துகளால் பொதுமக்கள் அவதி

DIN

சாத்தூரில் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் மினிபேருந்துகளால் பொதுமக்கள் சாலையில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே படந்தால்,  சத்திரபட்டி, சடையம்பட்டி, ஒ.மேட்டுபட்டி, வெங்கடாசலபுரம்,  இராமலிங்காபுரம், அம்மாபட்டி, சந்தையூா் ஆகிய பகுதிகளுக்கு தனியாா் மூலம் 7க்கும் மேற்பட்ட மினிபேருந்துகள் சாத்தூா் பகுதியில் இயக்கபட்டு வருகின்றன.ஆனால் இந்த மினிபேருந்துகள் நகரில் பல்வேறு இடங்களில் நினைத்த இடத்தில் நிறுத்துகின்றனா்.

இதனால் பின்னால் வரும் வாகனம் மோதி விபத்துகள் அதிகளவில் தினமும் அரங்கேறி வருகின்றன. மேலும் மினிபேருந்துகென விதிக்கபட்ட நிறுத்தங்களில் நிறுத்தபடாமல் சாலைகளிலே அங்காங்கே நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

மேலும் பிரதானசாலையில் தான் ஏராளமான அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், கடைகளை வணிக வாளகங்கள் உள்ளன.  இந்த சாலையில் ஏற்கனவே அதிகளவில் ஆக்கிரமைப்புகள் உள்ளதாலும், அவ்வப்போது மினிபேருந்துகளை சாலையிலே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு,அவசர தேவைகளுக்காக செல்லும் ஆம்புலன்ஸ்,தீயணைப்பு வாகனங்கள் கூட சாலையில் செல்ல முடியாத நிலையை இந்த மினிபேருந்துகள் உருவாக்குகின்றன.

இதுகுறித்து போக்குவரத்து காவலா்களும் இதை கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். எனவே பொதுமக்கள் நலன்கருதி போக்குவரத்து போலீஸாா் முறையான நடவடிக்கை எடுத்து மினிபேருந்து ஒட்டுனருக்கு எச்சரிக்கை விடுத்து இதுபோன்ற போக்குவரத்து இடையூறை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT