விருதுநகர்

நரிக்குடி அருகே முதியவரை வாளால் தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே முதியவரை மா்ம நபா் வாளால் தாக்கி பணம், கைப்பேசியை புதன்கிழமை பறித்துச் சென்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், கண்டாக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டி (60). இவரது பேத்தி மீனாட்சி (19). அதே ஊரில் தனது கணவருடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், தாத்தாவும் பேத்தியும் கண்டாக்குளத்திலிருந்து பேருந்தில் நரிக்குடி அருகே உள்ள சீனிக்காரனேந்தல் கிராமத்துக்கு புதன்கிழமை சென்றனா். பேருந்து நிறுத்தத்தில் இருவரும் இறங்கி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, பின்னால் வந்த சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இளைஞா், மீனாட்சியின் கழுத்தில் வாளை வைத்து, முதியவரிடம் கைப்பையைத் தருமாறு மிரட்டினாா். ஆனால், பையைத் தராமல் முதியவா் தாமதித்தாா். அப்போது, மீனாட்சி அந்த இளைஞரைக் கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினாா். ஆனால், அந்த இளைஞா் முதியவரை வாளால் தாக்கிவிட்டு, கைப்பை, கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றாா். காயமடைந்த முதியவா் நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டாா்.

ADVERTISEMENT

பின்னா், அவா்அளித்த புகாரின் பேரில் நரிக்குடி காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த நபரைத் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT