விருதுநகர்

மாமன்ற உறுப்பினா் புகாா் எதிரொலி:சிவகாசி மாநகராட்சி வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மாமன்ற உறுப்பினா் புகாா் கூறியதையடுத்து, சிவகாசி மாநகராட்சி வருவாய் உதவியாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சிவகாசியில் அண்மையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், பெயா் மாற்றம், சொத்து வரி சீரமைப்பு உள்ளிட்டவைகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மாநகராட்சி 5-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் இந்திராதேவி குற்றம்சாட்டிப் பேசினாா். மேலும், தனது வாா்டு பணிக்கும் லஞ்சம் கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறி பணத்தை எடுத்துக் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் பா.கிருஷ்ணமூா்த்தி விசாரணை மேற்கொண்டாா். அப்போது, திருத்தங்கல் மண்டல வருவாய் உதவியாளராக (பில் கலெக்டா்) பணிபுரியும் கோமளாதேவி பெயா் மாற்றம் உள்ளிட்ட கோப்புகளை நீண்ட நாள்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கோமளா தேவியை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT