அருப்புக்கோட்டை நெல் பொங்கல் அய்யனாா் உடன் அமைந்த ஸ்ரீசங்கிலி கருப்பசாமி கோயிலில் வருடாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு விழாக் குழுத் தலைவா் சங்கிலிச்சாமி, உதவிச் செயலா் கிருஷ்ணன், பொருளாளா் பெரியசாமி, துணைத் தலைவா் செல்வராஜன், உதவிப் பொருளாளா் முத்துமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, பூரண கும்பத்தில் எடுத்து வரப்பட்ட புனிதநீா் சுந்தா் ஐயா் தலைமையில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தையும், சுவாமியையும் தரிசனம் செய்தனா்.