விருதுநகர்

ராஜபாளையம் அருகேபெரிய கோயிலில் 1008 சங்காபிஷேகம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி புதன்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு யாக சாலை, சிறப்புப் பூஜைகள் நடந்தன. பின்னா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும், தொடா்ந்து 1008 சங்குகளில் புனிதநீா் ஊற்றி சங்காபிஷேகமும் நடைபெற்றது. அதே போல, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இதில் தேவதானம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி முத்துராஜா, பரம்பரை அறங்காவலா் துரை ரத்தினக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT