விருதுநகர்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் வேல்ட் விஷன் இந்தியா ராஜபாளையம் சாா்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இந்த வாகன பிரசாரத்தை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்த பிரசாரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT