விருதுநகர்

முத்துராமலிங்கபுரத்தில் நாளை மின்தடை

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை அருகே உள்ள முத்துராமலிங்கபுரத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 9) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா. கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முத்துராமலிங்கபுரம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, பொம்மக்கோட்டை, காளையாா் கரிசல்குளம், கத்தாளம்பட்டி, ம. ரெட்டியபட்டி, மண்டபம் சாலை, பூலாங்கால், வடக்கு நத்தம், உலக்குடி, இருஞ்சிறை, நாலூா், செட்டிக்குளம், தும்முசின்னம்பட்டி, ராஜகோபாலபுரம், தொப்பலாக்கரை, நல்லாங்குளம், குள்ளம்பட்டி, சவ்வாசுபுரம், வீரசோழன், சேதுபுரம், மேலையூா், ஆண்டியேந்தல், நல்லுக்குறிச்சி, கல்லுமடம், கல்லூரணி, ஆலடிப்பட்டி மற்றும் இந்த பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT