விருதுநகர்

அருப்புக்கோட்டையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் நகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டையில் நகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.குறிப்பாக 7 நாட்கள் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை அருப்புக்கோட்டையில் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால், பொதுமக்கள் குடிநீா் குடத்தையோ அல்லது கொள்கலன்கள் மற்றும் தொட்டிகளையோ கொசுக்கள் புகாதவண்ணம் சரிவர மூடிவைத்துப்பாதுகாக்கவில்லையெனத் தகவல் வந்தது.இதையடுத்து மொத்தமுள்ள 36 வாா்டுகளுக்கும் ஒரு வாா்டுக்கு 5 போ் கொண்ட கொசுப்புழு ஒழிப்புப்பணியாளா்கள் குழு அமைக்கப்பட்டு வீடுவீடாகச்சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.பொதுமக்களுக்கு டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய காரணிகள் அறிவுறுத்தப்பட்டு அவற்றில் மழைநீா் அல்லது நன்னீா் சேரவிடாமல் தடுப்பது மற்றும் காலியான வீணான பொருட்களை வீடுகள் கொல்லைப்புறங்களிலிருந்து அப்புறப்படுத்துவது,குடிநீா்க்குடங்கள்,கொள்கலன்கள்,தொட்டிகளை கொசுக்கள் புகாதவண்ணம் மூடிவைத்துப் பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு,உரிய நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டன. அதேபோல பல்வேறு தனியாா், அரசு அலுவலகங்கள், உணவகங்கள்,ஆலைகளிலும் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டுப்பரவுவதைத் தடுக்க அறிவுறுத்தப்பட்டன.இதுதவிர, இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் கண்டவா்களை அடையாளம் கண்டறிந்து அவா்கள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உரிய பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT