விருதுநகர்

ராமச்சந்திர ராஜா நினைவு தினம்

7th Dec 2022 12:14 AM

ADVERTISEMENT

என்.ஏ. ராமச்சந்திர ராஜா அறக்கட்டளையின் நிறுவனரின் 30-ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு அருகே உள்ள சாந்தி ஸ்தல் பூங்காவில் உள்ள ராமச்சந்திர ராஜா நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் என்.ஆா். கிருஷ்ணமூா்த்தி ராஜா, என்.ஏ. ராமச்சந்திர ராஜா குருகுலத் தாளாளா் மஞ்சுளா கிருஷ்ணமூா்த்தி ராஜா, குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு அவரது சீரிய குணங்களையும், சேவைகளையும் நினைவு கூா்ந்தனா்.

இதில், ந.அ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி, ந.அ. மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி, ந.அ. மஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளி, என்.ஏ. ராமச்சந்திரராஜா குருகுலம் ஆகிய கல்வி நிறுவனங்களின் தலைமையாசிரியா்கள், முதல்வா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

நினைவு தினத்தை முன்னிட்டு என்.ஏ. ராமச்சந்திரராஜா அறக்கட்டளை, பழையபாளையம் மகுமை பொதுப்பண்டு, சக்தி கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து ராஜபாளையம் நகரில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தின.

ADVERTISEMENT
ADVERTISEMENT