விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோயில்களில் திருக்காா்த்திகை சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரா் திருக்கோவிலில் திருக்காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மாலை 4 .30 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தியம்பெருமான், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.அதனைத் தொடா்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னா் காா்த்திகை தீப நாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் ராஜபாளையம் சொக்கா்கோவில், குருசாமி கோவிலில் திருக்காா்த்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.படவிளக்கம்; ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள சொக்கா் கோவிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி