ராஜபாளையம் அருகே மண் கடத்திய மூன்று போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் - எழந்திரைகொண்டான் சாலையில் உள்ள மருத்துவனேரி பகுதியில் மண்டல துணை வட்டாட்சியா், வட்டாட்சியா், விஏஓ, வருவாய் ஆய்வாளா் ஆகியோா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டதில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் மலா்விழி அளித்த புகாரில் சொக்கநாதன்புத்தூரை சோ்ந்த முருகன், நவரத்தினம் உட்பட மூன்று போ் மீது வழக்கு பதிவு செய்து தளவாய்புரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.