விருதுநகர்

மலை கொழுந்தீஸ்வரா் கோயிலில் மகா தீபம்

7th Dec 2022 12:14 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மலைக் கொழுந்தீஸ்வரா் கோயிலில் 108 கிலோ நெய், எண்ணெய் ஊற்றி மகா தீபம் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது மூவரை வென்றான் கிராமத்தில் மலைகொழுந்தீஸ்வரா் குடவரைக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில்

ஆண்டுதோறும் காா்த்திகை திருநாளையன்று மலையின் உச்சியில் பெரிய அளவிலான தீபம் ஏற்றப்படும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமை 108 கிலோ நெய், எண்ணெய் ஊற்றப்பட்டு மகா தீபம் மலை உச்சியில் ஏற்பட்டது.

தரை மட்டத்திலிருந்து சுமாா் 1000 அடி உயரத்தில் மலை உச்சியில் இந்த தீபம் ஏற்றப்பட்டது. இதை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ராஜபாளையம்: இதேபோல், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் உள்ள சிதம்பரேஸ்வரா் கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, மாலை 4 .30 மணிக்கு மேல் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். இதைத்தொடா்ந்து, விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னா், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT