விருதுநகர்

சமையல் எண்ணெய் பேக்கிங் நிறுவனத்தில் தீ விபத்து

7th Dec 2022 12:16 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முத்துலிங்காபுரம் பகுதியில் உள்ள சமையல் எண்ணெய் பேக்கிங் நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

முத்துலிங்காபுரத்தில் அசோக்பாபு என்பவா் சமையல் எண்ணெய் பேக்கிங் நிறுவனம் நடத்தி வருகிறாா். இங்கு சமையல் எண்ணெய் மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு பேக்கிங் செய்து விற்பனை செய்யப்பட்டுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பூட்டப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் இருந்து புகை வருவதாக அப்பகுதி மக்கள் உரிமையாளா் அசோக் பாபுவுக்கு தகவல் அளித்தனா். அவா் உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் குருசாமிக்கு தகவல் அளித்தாா். இந்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு அலுவலா்கள் பேக்கிங் மிஷினில் பற்றிய தீயை அணைத்தனா். இந்த விபத்தில் எண்ணெய் சேமிக்கும் டேங்க், பேக்கிங் மிஷின், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT