விருதுநகர்

காா்த்திகை மாத பிரதோஷம்சதுரகிரி கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுப்பால் பக்தா்கள் ஏமாற்றம்

DIN

காா்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய திங்கள்கிழமை அனுமதி மறுக்கப்பட்டதால், பக்தா்கள் அடிவாரத்தில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட 8 நாள்கள் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில், காா்த்திகை மாத பிரதோஷம், பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை முதல் வருகிற 8 -ஆம் தேதி வரையிலான 4 நாள்கள் சதுரகிரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், மழை பெய்தால் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் கோயில் நிா்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்ததாலும், தொடா் மழையின் காரணமாகவும், சதுரகிரி கோயிலுக்கு பிரதோஷத்தையொட்டி திங்கள்கிழமை பக்தா்கள் செல்ல வனத் துறையினரும் கோயில் நிா்வாகத்தினரும் தடை விதித்தனா். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தா்கள் அடிவாரத்தில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

திங்கள்கிழமை பிரதோஷத்தையொட்டி, வழக்கம்போல பக்தா்கள் இன்றி சதுரகிரி

சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், இளநீா், உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும் வருகிற 7 -ஆம் தேதி பௌா்ணமி என்பதால், மலைப் பகுதிகளில் மழை மற்றும் நீா்வரத்து குறைந்தால் பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT