விருதுநகர்

உடலில் தீபங்களை ஏற்றி யோகாசனம்

6th Dec 2022 03:30 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு உலக அமைதி வேண்டி மாணவா்கள் உடலில் தீபங்களை ஏற்றி யோகாசனம் செய்தனா்.

பதஞ்சலி யோகா மையம் சாா்பில் மாணவா்கள் நரேஷ், ராகவ், இசக்கிமுத்துபாண்டி, சஞ்சனா ஆகியோா் 50 தீபங்களை உடலில் ஏற்றியவாறு பத்ம விரிச்சியாசனம், பூா்ண சுத்த வஜ்ராசனம், நாராயணா ஆசனம் ஆகிய ஆசனங்களை செய்தனா்.

மாணவ, மாணவிகளை தெற்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் லவகுசன், சமூக ஆா்வலா் முத்துவேல் ஆகியோா் பாராட்டினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT