விருதுநகர்

சாத்தூா் அருகே காா் மோதி தொழிலாளி பலி

6th Dec 2022 03:29 AM

ADVERTISEMENT

சாத்தூா் அருகே நான்கு வழிச்சாலையில் காா் மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

எட்டயபுரம் தாலுகா செங்கோட்டையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கருப்பசாமி (50). இவா் சாத்தூா் பகுதியில் கட்டட வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை கோவில்பட்டி-சாத்தூா் நான்கு வழிச்சாலையில் சடையம்பட்டி அருகே அணுகு சாலையின் ஓரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த காா் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீஸாா் கருப்பசாமியின் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காா் குறித்து விசாரணை நடத்தினா்.

இதில், காா் ஒட்டுநா் கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தத்தைச் சோ்ந்த அய்யப்பன் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT