விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள காளவாசல் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (20). கட்டடத் தொழிலாளியான இவா் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகாா் கூறப்பட்டது.

அதன்பேரில், ராஜபாளையம் அனைத்து மகளிா் போலீஸாா் சக்திவேலைக் கைது செய்தனா். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இது தொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூா்ணஜெய ஆனந்த், தொழிலாளி சக்திவேலுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT