விருதுநகர்

ராஜபாளையத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழந்ததாா்.

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் முத்துலிங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (27). கட்டடத் தொழிலாளியான இவா், நண்பா் முனீஸ்வரனுடன் (23) இருசக்கர வாகனத்தில் பழைய பேருந்து நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் தனியாா் ஆலை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்தாா். அருகில் இருந்தவா்கள் முனீஸ்வரனை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். விபத்து குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா் முத்து மீது வழக்குப் பதிவு செய்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையப் போலீஸாா் விசாரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT