விருதுநகர்

ராஜபாளையத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அதிமுகவினா் ஊா்வலமாகச் சென்று அம்மா உணவகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் என்.எம்.கிருஷ்ணராஜ், மாவட்ட இணைச் செயலாளா் அழகுராணி, நகரச் செயலாளா்கள் பரமசிவம் (தெற்கு), வழக்குரைஞா் முருகேசன் (வடக்கு), ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.எம்.குருசாமி, நவரத்தினம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT