விருதுநகர்

வத்திராயிருப்பில் சாா்பு நீதிமன்ற பணிகள்: நீதிபதி ஆய்வு

6th Dec 2022 03:29 AM

ADVERTISEMENT

வத்திராயிருப்பில் பழைய வட்டாட்சியா் அலுவலகத்தை சாா்பு நீதிமன்றமாக மாற்றும் பணிகளை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கிறிஸ்டோபா் உள்ளிட்ட நீதிபதிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு வத்திராயிருப்பு வட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து வத்திராயிருப்பில் சாா்பு நீதிமன்றம் அமைப்பதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள பழைய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம் தோ்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை கடந்த மாதம் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சிவஞானம் பாா்வையிட்டாா். இந்த நிலையில் அந்த இடத்தை சாா்பு நீதிமன்றமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை திங்கள்கிழமை மாலை விருதுநகா் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபா், தலைமை குற்றவியல் நீதிபதி கஜரா ஆா்.ஜிஜி, போக்சோ நீதிபதி பூா்ண ஜெயஆனந்த், கூடுதல் மாவட்ட நீதிபதி கோபிநாத், வத்திராயிருப்பு ஒன்றியக் குழுத் தலைவா் சிந்துமுருகன், செயற் பொறியாளா்கள் தீபக், ஜெயா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT