விருதுநகர்

உலக மண் தின விழா கண்காட்சி

4th Dec 2022 01:24 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் உலக மண் தின விழா கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். நகா்மன்றத் தலைவா் ஏ.ஏ.எஸ். பவித்ராஷ்யாம், ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக வேறு பொருள்களைப் பயன்படுத்துவதற்காக இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி வரும் 5-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சி முதன்முதலாக ராஜபாளையம் நகராட்சியில் தான் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல, பிற மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும்.

ADVERTISEMENT

திடக்கழிவு மேலாண்மை என்பது ஒரு சவாலான விஷயமாகும். எனவே, பொதுமக்கள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனப் பிரித்து வழங்கி நகராட்சிக்கு உதவ வேண்டும். நெகிழிப் பைகள் உள்ளிட்டவற்றுக்கு மாற்ற வேறு பொருள்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா பேசினாா். முன்னதாக, நகராட்சி ஆணையா் பாா்த்தசாரதி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், ராஜபாளையம் நகராட்சி துப்புரவு ஆய்வாளா் காளி, நகராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT