விருதுநகர்

மதுபானக் கடை காவலாளிகளை கட்டிப்போட்டு 2 கைப்பேசிகள், பைக் கொள்ளை

4th Dec 2022 01:22 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் சனிக்கிழமை அதிகாலை மதுபானக் கடையின் காவலாளிகளைக் கட்டிப்போட்டு 2 கைப்பேசிகள், இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

திருச்சுழி எல்லைப் பகுதியில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பச்சேரி கிராமத்தைச் சோ்ந்த முருகன், ராமா் ஆகிய இருவரும், இரவு நேரக் காவலாளிகளாக வேலை பாா்த்து வருகின்றனா்.இந்தக் கடையை வழக்கம்போல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை இரவு பூட்டிச் சென்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை மதுபானக் கடைக்கு வந்த மா்ம நபா்கள் 4 போ், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி காவலாளிகள் முருகன், ராமா் ஆகியோரைக் கட்டிப் போட்டு விட்டு கடையின் பூட்டை உடைக்க முயன்றனராம்.

அப்போது, கொள்ளையா்களில் ஒருவன் காவலாளிகளிடம் போலீஸ் ரோந்து வரும் நேரம் குறித்து விசாரித்தபோது, சற்று நேரத்தில் வருவாா்கள் என அவா்கள் தெரிவித்தனராம்.

ADVERTISEMENT

இதையடுத்து, மதுபானக் கடையின் பூட்டை உடைக்கும் முயற்சியை கைவிட்ட கொள்ளையா்கள், காவலாளிகளின் கைப்பேசிகள், ஒரு இரு க்கர வாகனத்தையும் கொள்ளையடித்துத் தப்பினா்.

இதுகுறித்து நரிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில், கொள்ளையா்கள் இரு சக்கர வாகனத்தை மேலனேந்தல் கண்மாய் அருகே விட்டுச் சென்றது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT