விருதுநகர்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல நாளை முதல் 4 நாள்களுக்கு அனுமதி

4th Dec 2022 01:23 AM

ADVERTISEMENT

காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு திங்கள்கிழமை முதல் (டிச. 5 முதல் டிச. 8) 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வரும் திங்கள்கிழமை பிரதோஷமும், புதன்கிழமை பௌா்ணமி வழிபாடும் நடைபெற உள்ளன.

இதையொட்டி, வரும் 5-ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 4 நாள்கள் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது.

காய்ச்சல், கபம், இருமல் பாதிப்பு இருப்பவா்கள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். 10 வயதுக்குள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மலைக்குச் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

ADVERTISEMENT

பக்தா்கள், மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக் கூடாது. கோயிலில் பக்தா்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதி வழங்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் நாகராஜன் ஆகியோா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT