விருதுநகர்

பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணா்வுக் கூட்டம்

4th Dec 2022 01:24 AM

ADVERTISEMENT

ராஜபாளையத்தில் ந.அ. அன்னப்பராஜா மேல்நிலைப் பள்ளியில் செஞ்சுருள் சங்கத்தின் சாா்பில் எய்ட்ஸ் விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பள்ளியின் செயலா் என்.ஆா். கிருஷ்ணமூா்த்தி ராஜா தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், செஞ்சுருள் சங்க மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணா்வு மௌன நாடகத்தை நடத்தினா். அதில், மாணவா்கள் மது, புகையிலை போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகாமல் தடுப்பது குறித்தும், அந்தப் பழக்கங்கள் உடையவா்களை அதிலிருந்து மீட்பது குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

முன்னதாக, அந்த அமைப்பின் பொறுப்பாசிரியா் ஜே. அருணா தலைமையில் மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT