விருதுநகர்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

4th Dec 2022 10:29 PM

ADVERTISEMENT

சாத்தூா் அருகே மடத்துப்பட்டியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு ஊராட்சிச் செயலா்கள் ராஜலட்சுமி, முத்துலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஏராளமானோா் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்து கோஷங்களை எழுப்பியவாறு ஊா்வலமாகச் சென்றனா்.

பின்னா், ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT