விருதுநகர்

அருப்புக்கோட்டை பள்ளியில் விளையாட்டு விழா

4th Dec 2022 01:24 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்பிகே சா்வதேசப் பள்ளியில் 10-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி, ஏ.ஆா். ராமா் தலைமை வகித்தனா். உறவின்முறைத் தலைவா் பி.கே. காமராஜன், ஆலோசகா்கள் வி. மனோகரன், பி. ரவீந்திரன், மாவட்ட உடல் கல்வித் துறை அலுவலா் பி. ராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. ஞான கௌரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஆட்சியா் பேசியதாவது:

மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் தன்னம்பிக்கை, நோ்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இது வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய உதவும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

பின்னா், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT