சாத்தூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பட்டாசு ஆலை தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே கீழகோதைநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த ஜெயபால் (50). இவா், இந்தப் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா். இவா், சனிக்கிழமை சாத்தூா் - கோட்டைபட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
கீழதாயில்பட்டி சந்திப்பு அருகே வந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜெயபால் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநரான சுப்பராஜிடம் விசாரணை நடத்தினா்.