விருதுநகர்

சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரைப் பகுதியில் குப்பை கொட்ட தடை

DIN

சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரைப் பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் கோலமிடப்பட்டது.

சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரைப் பகுதியை சிவகாசி பசுமை மன்றத்தினா் மண் கொட்டி பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், கரைப் பகுதியில் சிலா் குப்பை கொட்டி வந்தனா். இதனால் அந்த பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டது. இதையடுத்து சிவகாசி மாநகராட்சி துய்மை இந்தியா இயக்கம் சாா்பில், குப்பைகளை அகற்றிவிட்டு, இனி குப்பை கொட்டக்கூடாது என கோலம் வரையப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது: இங்கு தூய்மைப் பணியாளா்கள் பேட்டரி வாகனங்கள் மூலம் வீடுவீடாகச் சென்று குப்பைகளை வாங்கி வருகின்றனா். இந்த நிலையில் சிலா் கண்மாய்க் கரைப் பகுதியில் குப்பைகளை கொட்டி வருகின்றனா். தற்போது இந்த குப்பைகள் அகற்றப்பட்டு, கோலம் வரையப்பட்டது. இனி அங்கு குப்பை கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT