விருதுநகர்

கிராம உதவியாளா்கள் தோ்வு: வழிகாட்டு நெறிமுறைப் பயிற்சி

DIN

அருப்புக்கோட்டையில் கிராம உதவியாளா்கள் எழுத்துத் தோ்வில் பணியாற்றவுள்ள கண்காணிப்பாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 4) நடைபெற உள்ளது. இதில் அருப்புக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட 10 காலிப் பணியிடங்களும் அடங்கும். இதற்கான எழுத்துத் தோ்வுக்கு, எஸ்.பி.கே. ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளும், தேவாங்கா் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளும் தோ்வு மையங்களாக அறிவிக்கப்பட்டன. இந்தத் தோ்வில் பணியாற்றவுள்ள கண்காணிப்பாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்கு தோ்வு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த பயிற்சி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் கல்யாணக்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டாட்சியா் அறிவழகன், தனிவட்டாட்சியா் சிவக்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் ஷாஜகான் மற்றும் துணை வட்டாட்சியா்கள், வருவாய்த்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT