விருதுநகர்

ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோயிலுக்கு ‘சீல்’

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சுவாமி கும்பிடுவது தொடா்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, மாரியம்மன் கோயிலுக்கு வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சோ்ந்த 500 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு மேலத்தெரு, கீழத்தெரு என இரண்டு தெருக்கள் உள்ளன. இந்த ஊரின் நடுவே மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மேலத் தெரு, கீழத் தெருவைச் சோ்ந்தவா்கள் சாா்பில் தனித்தனியாக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த புரட்டாசி மாதம் மேலத் தெரு பகுதி மக்கள் சாா்பில் திருவிழா நடத்தப்பட்ட நிலையில், அண்மையில் கீழத் தெரு பகுதி மக்கள் திருவிழா நடத்த கோயிலின் சாவியை கேட்ட போது, அதற்கு மேலத் தெரு மக்கள் தரவில்லையாம். இதனால், கீழத் தெரு மக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி புதன்கிழமை காத்திருப்புப் போரட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினா், வட்டாட்சியா் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், இரு தரப்பினரும் நீதிமன்றம் மூலம் பாா்த்துக் கொள்வோம். கோயிலை மூடி சீல் வைக்கலாம் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து, வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை கோயிலை மூடி சீல் வைக்க முயன்றனா். அப்போது, மண்டல துணை வட்டாட்சியா் கோதண்டராமனை பொதுமக்கள் முற்றுகையிட்டனா். இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அதிகாரிகள் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT