விருதுநகர்

கோயில் அகற்றம்: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் வீதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவில், பக்தா்கள் எதிா்ப்பை மீறி, நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றம்

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் வீதியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயிலை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அருப்புக்கோட்டை உஜ்ஜிசாமி தெரு அருகே ஒரு வீதியில் சந்தன மாரியம்மன் கோயில் இருந்தது. இந்த நிலையில், இக்கோயில் வீதியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக அருப்புக்கோட்டையைச் சோ்ந்த அசோகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தாா்.

இதன் பேரில் விசாரணை நடத்திய உயா்நீதிமன்றம் அந்தக் கோயிலை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து, அந்தக் கோயிலை அகற்றவதற்காக, நகராட்சி ஆணையாளா் ஜி. அசோக்குமாா் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்றனா். அப்போது அப்பகுதி பெண்கள் உள்ளிட்டோா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கோயிலின் முன்பாக திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆண் பக்தா் ஒருவா் அங்குள்ள கட்டடத்தின் மேல் ஏறி தீக்குளிக்க முயற்சித்தாா். அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கீழே அழைத்து வந்தனா்.

இதன் பின்னா், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, கோயில் இடித்து அகற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

SCROLL FOR NEXT