விருதுநகர்

மாநில தடகளப் போட்டியில் இரண்டாம் இடம்: மாணவருக்குப் பாராட்டு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான தடகளப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள காமராஜா் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவா் வசந்தகுமாா், திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்ற 63-ஆவது மாநில அளவிலான தடகளப் போட்டியில் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் (போல் வால்ட்) பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தாா்.

இந்த மாணவரை கிராம மக்கள், உடற்கல்வி ஆசிரியா் காா்த்திகேயன், பள்ளியின் செயலாளா் பாலாஜி, தலைவா் லட்சுமணன், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT