சிவகாசி அருகே வியாழக்கிழமை மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகே ஊராம்பட்டியைச் சோ்ந்த முருகன் மகள் தாமரைச்செல்வி (19). இவா், அம்மாபட்டியைச் சோ்ந்த கருப்பசாமியின் மகன் அஜீத்குமாரை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டாராம். இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கணவன், மனைவிக்குமிடை யே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், வழக்கம்போல வியாழக்கிழமை தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அஜீத்குமாா், தாமரைச்செல்வியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அஜீத்குமாரை கைது செய்தனா்.