விருதுநகர்

ராஜபாளையம் அருகே தோட்டத்தில் ஆடு, கோழி திருட்டு; போலீஸாா் விசாரணை

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் தோட்டத்தில் இருந்த ஆடு, கோழி திருடு போனதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் செவல்பட்டி தெருவை சோ்ந்தவா் ராமதாஸ்(44). இவா் மேற்கே அனைத்தலை அருகே உள்ள ராக்காச்சியம்மன்கோயில் செல்லும் சாலையில் இவருக்கு தென்னந்தோப்பு உள்ளது. அங்கு காவலாளியாக இருந்த நடராஜன் என்பவரை கடந்த 29-ம் தேதி வேலையை விட்டு நிறுத்தி விட்டாா். இந்நிலையில் ராமதாஸ் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்து வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அங்கிருந்த இரு ஆட்டு குட்டிகள், 17 கோழிகள், கோடாறி, மண் வெட்டி ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது.அப்பகுதியில் தேடியும் ஆடு, கோழிகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராமதாஸ் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT