விருதுநகர்

கட்டங்குடியில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்கக் கோரிக்கை

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் கட்டங்குடியில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கட்டங்குடி நெசவாளா் குடியிருப்பில் சுமாா் 240 வீடுகளுக்கு மேல் உள்ளன. இந்தக் குடியிருப்புக்குச் செல்லும் சாலையிலும், இந்தக் குடியிருப்பிலிருந்து விவசாய நிலங்களுக்குச் செல்லும் சாலையிலும் போதிய மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. அதிக இடைவெளி விட்டு மின் விளக்குகள்

அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

பேருந்து நிறுத்தப் பகுதியில்கூட போதிய மின் விளக்குகள் இல்லாததால், இரவில் பேருந்திலிருந்து இறங்குவோா் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, இந்தக் குடியிருப்பிலும், கட்டங்குடி வரையிலான சாலையிலும் கூடுதல் மின் விளக்குகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT