விருதுநகர்

பகவத் கீதை ஒப்பித்தல்: ராஜபாளையம் மாணவா் தோ்வு

1st Dec 2022 01:53 AM

ADVERTISEMENT

அகில இந்திய அளவிலான பகவத் கீதை ஒப்பித்தல் போட்டிக்கு ராஜபாளையம் வேத பாட சாலை மாணவா் தோ்வாகி உள்ளாா்.

மத்திய அரசின் சமஸ்கிருத பல்கலைக் கழகம் சாா்பில் கடந்த 27 -ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள சென்னை சமஸ்கிருத கல்லூரியில் மாநில அளவிலான ஸ்ரீமத் பகவத் கீதை ஒப்பிக்கும் போட்டி நடைபெற்றது. இதில், ராம்கோ குழுமத்தின் ஸ்ரீஅபிநவ வித்யாதீா்த்த பாரதீ வேத பாடசாலையின் ரிக் வேத மாணவா் ஜி.எல் ஸ்ரீதரா முதலிடம் பெற்று, பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான போட்டிக்கு தோ்வாகியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT