விருதுநகர்

அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகள் செய்துதர நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

1st Dec 2022 01:55 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நகா் மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் ஜி.அசோக்குமாா், நகா் நல அலுவலா் ராஜநந்தினி, சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தின்போது பெரும்பான்மையான நகா்மன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதிகளில் முறையான வாருகால், சாலை வசதி, முறையான குடிநீா் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரக் கோரியும், அதற்கேற்ற நிதியை விரைவில் வழங்கி பணிகளை முடித்துத் தரவும் கோரிக்கை வைத்தனா்.

அதற்கு நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி பதிலளிக்கும்போது, கோரிக்கைகளை மனுவாகத் தரும்படியும், உரிய ஆலோசனை செய்து விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவித்தாா்.

ADVERTISEMENT

நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள், தலைமைப் பொறியாளா் உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT